.

சிம்மவிஷ்ணு (கி.பி. 575- 615) வாழ்க்கை வரலாறு

பிற்காலப் பல்லவ அரசர்களில் முதல்வன் சிம்மவிஷ்ணு. இவன் இடைக்காலப் பல்லவ மன்னனான மூன்றாம் சிம்மவர்மனின் உறவினனான முதலாம் நந்திவர்மன் என்னும் மன்னனுக்குப் பின் பட்டம் பெற்றவன்.

இதைக் காசக்குடி, வேலூர்ப் பாளையம், கூரம் பட்டயங்கள் கூறுகின்றன அவந்தி சுந்தரி கதையில் கங்க அரசனான துர்விநீதன், சாளுக்கிய விஷ்ணுவர்த்தனன் காலத்தவனாகச் சிம்மவிஷ்ணு குறிக்கப்படுகின்றான்.



“சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்னும் உலகைத் தாங்கும் பலமான மலை போன்றவள், நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன், பல நாடுகளை வென்றவன், வீரத்தில் இந்திரனை ஒத்தவன்; செல்வத்தில் குபேரனைப் போன்றவன்; அவன் அரசர் எறு,’ என முதலாம் மகேந்திரவர்மனின் மத்த விலாசப் பிரகசனத்தில் சிறப்பிக்கப் பட்டுள்ளது.

”சிம்மலிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவள் காவிரி பாயப் பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்’ என இவனது. போர்ச்செயல் பற்றிக் கூறுகிறது, வேலூர்ப்பாளையம் பட்டயம்.

‘இப்பூலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான்; அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான்; களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்’ என இரண்டாம் நந்திவர்மன் காலத்து காசக்குடிப் பட்டயம் கூறுகிறது.

கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில்*சிம்ம விஷ்ணு சதுர்வேதிமங்கலம்’ பற்றியச் செய்தி கூறப்பட்டுள்ளது புதுக்கோட்டையருகே சித்தன்ன வாசலில் முதலாம் மகேந்திரவர்மன் குகைக்கோயில் அமைத்துள்ளான், அவள் தன் காலத்தில் அப்பகுதியைக் கைப்பற்றவில்லை. எனவே புதுக்கோட்டை வரையுள்ள சோழ நாட்டைச் சிம்மவிஷ்ணுவே வென்று அடிமைப்படுத்தியவன் என்று புலப்படுகிறது.

‘பக்தி ஆராதித்த விஷ்ணு சிம்மவிஷ்ணு’ என உதயேந்திரப் பட்டயம் கூறுவது இவன் வைணவன் என்பதனை உணர்த்தும்.வாகாடகர் என்பவர், அஜந்தா குகைக்கோயில்களை அமைத்தனர்.

அவரோடு திருமணத் தொடர்பு கொண்ட விஷ்ணு குண்டர் என்னும் மரபினர் கிருஷ்ணை யாற்றங்கரையில் பல குகைக் கோயில்களை அமைத்தனர்.

அவற்றையெல்லாம் கண்ட சிம்மவிஷ்ணுவும். அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மனும் அத்தகைய குகைக் கோயில்களைத் தாமும் அமைத்தனர்.

மாமல்லபுரத்தில் காணப்படும் ஆதிவராகர் குகைக்கோயில் சிம்மவிஷ்ணுவால் அமைக்கப்பட்டது அக்குகைக்கோயிலின் வடபுறப் பாறையில் ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

அதனடியில் உட்கார்ந்த நிலையிலுள்ள உருவமும், சிம்மவிஷ்ணுவின் இருபுறமும் இரு மனைவியரின் உருவங்களும் காணப்படுகின்றன. சிம்ம விஷ்ணுவின் அவையில் பாரவி என்னும் வடமொழிப் புலவர் இருந்து பாக்கள் இயற்றினார்.

Previous Post Next Post

نموذج الاتصال